Editorial / 2019 டிசெம்பர் 22 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 14 இளைஞர்கள் போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் நேற்று (21) குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து ஜஸ், ஹெரோய்ன், மதனமோதகம், கேரளா கஞ்சா
உள்ளிட்ட போதைப்பொருட்கள்பொலிஸார் கையற்றப்பட்டுள்ளன.
கொழும்பு, அவிசாவளை, காலி, எல்பிட்டிய, கம்பஹா .ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யபட்ட 14 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.






1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago