R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கு, நான்கு பணியாளர்களுக்குமான 19 ஆம் ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் வியாழக்கிழமை 14 அன்று காலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது .
குறித்த இந்த நினைவேந்தல் நிகழ்வில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெற்றது நிகழ்வில் உயிரிழந்த பிள்ளைகளின் உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன் பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் முன்னாள் கரைச்சி பிரதேச சபைஉறுப்பினர் ச.ஜீவராசா சமூக செயற்பாட்டாளர் த.யோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







சண்முகம் தவசீலன்
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago