2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

ஜின்னா புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கடந்த ஆண்டுகளைப் போலவே திறமை சித்தி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வினை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நேற்று (24/05/2023) ஏற்பாடு செய்திருந்தது. இந்த புலமைப்பரிசில்கள் 2006 ஆம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 2400 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானின் ஸ்தாபக தந்தையான முஹம்மது அலி ஜின்னாவின் பெயரால் வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X