Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (27) இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மதிய நேர உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டம் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ,கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
குறித்த போராட்டத்தின் போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி
சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்
அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும், சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதாரத் துறையை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை எனவும் இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் வேறு அரச ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்க அரசு முன்வரவேண்டும் கொடுப்பனவுகள் அதிகரிக்கும் போது பாரபட்சம் இன்றி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
டி.சந்ரு செ.திவாகரன்
7 minute ago
24 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
28 minute ago
34 minute ago