Editorial / 2017 நவம்பர் 16 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}



மு.இராமச்சந்திரன்
ஹட்டன், செனன் கே.ஜி பிரிவிலுள்ள லயன் குடியிருப்பொன்றில், இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தால், மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளனவென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு வீடுகளைக் கொண்ட குறித்த லயன் குடியிருப்பில், ஒரு குடியிருப்பு முற்றாக சேதமாகியுள்ளதுடன், மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்தால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், எனினும், வீடுகளில் இருந்த பெறுமதிவாய்ந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளனவெனவும் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸார், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவந்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிப்படைந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago