2026 மார்ச் 26, வியாழக்கிழமை

நெல்லின அறுவடை விழா

Janu   / 2026 மார்ச் 24 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் கரு இழை ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் முதன்முறையாகப் பயிரிடப்பட்டு, அவற்றின் அறுவடை மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நெல்லினங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு இவ்வாறு பயிரிடப்பட்டிருந்ததுடன், திங்கட்கிழமை (23) அறுவடை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வயல் நிலத்தில் பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. பொங்கலைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி வயல் மீண்டும் உழப்பட்டு, சிறுதானியப் பயிரான பயறு விதைக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தினால் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொஸ்தா மற்றும் பெருமளவிலான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மேற்குறிப்பிட்ட இந்த அபூர்வ நெல்லினங்கள் இலங்கையில் பயிரிடப்படுவது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்படுகிறது.

 பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .