Freelancer / 2023 நவம்பர் 16 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின்
200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் இணைந்து புதன்கிழமை (15) விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


"பரதக்கலை" சம்மந்தமாக இஸ்லாமிய மௌலவி ஒருவரின் சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


மேலும், பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும்.அதனை தெய்வீக கலையாக நாங்கள் கடந்துவரும் நிலையில் அதனை கீழ்த்தரமான கலையாக விமர்சனம் செய்த குறித்த நபருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவரின் கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
6 minute ago
11 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
17 minute ago