Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 மார்ச் 12 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடுதி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திங்கட்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நோயாளர் விடுதியை பார்வையிட்ட ஆளுநர், முதலாவது நோயாளரையும் விடுதியில் அனுமதித்தார். இதன்போது பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய ஆளுநர்,
வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். நோயாளர்களை அதிகரித்து சுகாதாரத் துறையை வீழ்ச்சியடைய செய்ய தான் ஒருபோதும் விரும்பவில்லை எனவும், தற்கால உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
கிராமிய, பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை வடக்கு மாகாணத்தில் காணப்படுகிறது. மேலும் இளவாலை கிராமத்திற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பும் எனக்கு உள்ளது. இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் .
அத்துடன் இளவாலை கிராம அபிவிருத்திக்காக செயற்படும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கும் ஆளுநர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் .
இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள், அதிகாரிகள், நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago