Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு 13, பாபர் வீதியிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத் தேர்த் திருவிழா, நேற்று வியாழக்கிழமை (22) நடைபெற்றது.
இத்திருவிழாவை தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி முஸ்லிம் மக்கள் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவை முஸ்லிம்கள் தடுத்து நிறுத்த முற்படுவதாக ஒரு செய்தி பரவியது. இந்த நிலையில், கடந்த நடைபெறவிருந்த தேர்த் திருவிழா இறுதியில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, இம்மாதம் திங்கட்கிழமை (12) இவ்விவகாரம் தொடர்பில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
அதில் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோர் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், குறித்த கோயில் நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, குறித்த தேர்த் திருவிழாவினை நல்லதொரு நாளில் நடத்தவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
ramesh.s Friday, 23 October 2015 05:43 AM
integrated deccession making is absolute good
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago