2026 மே 12, செவ்வாய்க்கிழமை

dd

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்...

Janu   / 2026 மே 11 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் திங்கட்கிழமை (11) ஆரம்பமானதை யொட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு முன்பாக நினைவு நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

இந்நிகழ்வை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது, ஒரு வேளை உணவாகக் கஞ்சிகூடக் கிடைக்காமல் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்ததை நினைவுபடுத்தும் விதமாக, நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .