Janu / 2026 ஜனவரி 20 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னாரில் இருந்து சக்கர கதிரை மூலம் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி செவ்வாய்க்கிழமை (20) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர் திங்கட்கிழமை (19) அன்று தனது பயணம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தெரியப்படுத்தியுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை (20) காலை 8.45 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சில கோரிக்கைகளை முன் வைத்தும் குறித்த இளைஞன் மன்னாரில் இருந்து இலங்கை முழுவதுமான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
எஸ்.ஆர்.லெம்பேட்






53 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
01 May 2026