Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார இலங்காதிலக்க, செ.தி.பெருமாள்
நுவரெலியா மாவட்டத்தில் நீடித்துவரும் வரட்சியான வானிலை காரணமாக, மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தளங்கள் பொழிவிழந்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதென்றும் இதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ள நீர்நிலைகளில், கற்பாறைகள் வெளித்தெரியும் வகையில், நீர் வற்றியுள்ளதுடன், அவை பொழிவிழிந்தும் காணப்படுகின்றன.
குறிப்பாக, டெவோன் நீர்வீழ்ச்சி, சென்கிளேயர், எபடீன், லக்ஷபான, இறம்பொடை, கடியலேன, கரடியெல்ல, டன்சினன் ஆகியப் பகுதிகளிலுள்ள நீர்வீழ்ச்சிகளில், நீர்வற்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா மேற்கொண்டு நுவரெலியா, பதுளை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டுப் பயணிகள், அதிக உஷ்ணமான வானிலை காரணமாக, வெளியில் சுற்றித்திரிவதைத் தவிரத்து, ஹோட்டல் அறைகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையே காணப்படுகிறது.
வரட்சியான வானிலையால், சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், பாரிய பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
33 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
9 hours ago
9 hours ago