Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கையிருப்பில் இருந்த பெற்றோல் முடிவடைந்துள்ளதால், பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நீண்ட வரிசைகளில் வாகன சாரதிகள் காத்திருப்பதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3,500 லீற்றர் பெற்றோல் மட்டுமே தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், இந்த பெற்றோல், இரண்டு மணித்தியாலங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கக்கூடியதாக உள்ளதெனவும் அவர்கள் கூறினர்.
பெற்றோல் தட்டுப்பாடு, இன்று உக்கிரமடையும் என்பதால் பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுமென்று, பெற்றோல் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மேலும் கூறினர்.
இந்நிலையில், நாவலப்பிட்டியில் பெற்றோல் நிரப்புவதற்கென சுமார் இரண்டு மீற்றர் தூரம் வரை வாகன நெரிசல், இன்று காணப்பட்டது.
பெற்றோல் நிரப்புவதற்காக, வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால், பிரதான நகரங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
19 minute ago
28 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
29 minute ago
48 minute ago