Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜூன் 18 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மலையகத்தில்; தொடர்ந்தும் பெய்து வரும் அடை மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு நிலை;யும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி மற்றும் புகையிரத வீதிகளில்; வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மாணவர்களும் பயணிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நுவரெலியா பிரதான பகுதிகளில் உள்ள வீதிகள் பனிமூட்டமாகவும் வழுக்கும் தன்மை காணப்படுவதாகவும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனால் வாகன சாரதிகள்; முன் விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும் தொடர்ந்து மழை பெய்வாதனால் வான் கதவுகளை திறந்து விடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு வான்கதவுகள் திறந்து விடும் பட்சத்தில் அதனை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அத்தோடு பலத்த காற்று வீசுவதனால் மரங்கள் முறிந்து விழும் அபாயமும் இருப்பதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் (18) இன்று காலை அதிக பனிமூட்டமாக காணப்பட்டதாகவும், ஹட்டன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பல வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago