2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது சர்வதேச யோகா தினம்...

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யோகா பயிற்சி, கொழும்பு காலி முகத்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ) 

இதேவேளை, யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் முதலாவது சர்வதேச யோகா தினத்தையொட்டிய மாணவர்களுக்கான யோகா பயிற்சி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்ததுடன் சுமார் 4,000 மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த், எம்.எல்.லாபீர்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் கடந்த 2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்று, ஜூன் மாதம் 21ஆம் திகதியானது சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X