2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

2023 விருது வழங்கல் விழா ; இரு ஊடகவியலாளர்களுக்கு விருது

Freelancer   / 2023 மே 25 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் வருடாந்தம் நாடாத்திவரும் 2023 விருது வழங்கல் விழா (20) கொழும்பு BMICH மண்டபத்தில் அதன் பிரதித் தலைவர் கலாநிதி எப்.எம்.சரீக் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வருடமும் நாடளாவிய ரீதியில் 60 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இம்முறை தெரிவு செய்யப்பட்டவர்களில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் கடந்த வருடம் சுற்றுச் சூழல் தொடர்பாக பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை தொடராக எழுதியமைக்காகவும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (துஷாரா) கடந்த வருடம் ஆயுள்வேத மருத்துவ மூலிகை கட்டுரைகளை தொடராக எழுதியமைக்காகவும் இரு ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அபு அலா 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X