2025 மே 01, வியாழக்கிழமை

78ஆவது ஆண்டு நினைவேந்தல்…

Editorial   / 2024 செப்டெம்பர் 06 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 78ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிட்டகோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வௌ்ளிக்கிழமை (6) காலை இடம்பெற்றது.

அங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன, கட்சியின் முன்னாள் செயலாளரும், இலங்கையின் முதலாவது பிரதமருமான மஹாமான்ய டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, சிறிகொத்த பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .