Shanmugan Murugavel / 2016 மே 24 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மில்லியன் கணக்கான ஸ்டேர்லிங் பவுண்ஸ்களை மேலதிக கொடுப்பனவாக தனக்கு தானே செலுத்தியதாக ஃபீபா பதில் செயலாளர் நாயகம் மார்க்குஸ் கட்ட்னர் மீது குற்றஞ்சாட்டப்பட்டமையையடுத்து, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். விசாரணையொன்று நம்பிக்கைப் பொறுப்பு மீறலைக் கண்டுபிடித்ததாக கால்பந்தாட்ட உலகை ஆளும் உடலான ஃபீபா தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இவர் பதவி விலக்கப்பட்டமையானது, 2011ஆம் ஆண்டு முன்னாள் ஃபீபா தலைவர் செப் பிளட்டரினால் யு.இ.எஃப்.ஏ தலைவர் மைக்கல் பிளட்டினிக்கு மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுக்கு சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முறைகேடுகளுக்காக முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் ஜெரோம் வல்க்கி பதவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து 45 வயதான ஜெர்மனியரான கட்ட்னர் பதில் பொதுச் செயலாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார்.
நிதிப் பணிப்பாளராக 2003ஆம் ஆண்டு ஃபீபாவில் இணைந்த கட்ட்னர், 2007ஆம் ஆண்டு துணைப் பொதுச் செயலாளர் நாயகம் ஆனார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago