Editorial / 2017 ஜூன் 30 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஃபீபா கூட்டமைப்புகளின் கிண்ணத் தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி தோல்வியடைந்த நிலையில், 3ஆவது இடத்துக்கான போட்டியில், அவ்வணியின்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது.
3ஆவது இடத்துக்கான போட்டி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிலையிலேயே, ரொனால்டோவுக்குப் பிறந்துள்ள இரட்டையர்களைப் பார்வையிடுவதற்காக, 3ஆவது இடத்துக்கான போட்டியில் பங்குபற்றுவதிலிருந்து, அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவரது இரண்டு குழந்தைகளும், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வாடகைத் தாயொன்றின் மூலம் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரொனால்டோவுக்கு, 7 வயதான மகனொருவர் ஏற்கெனவே உள்ளார்.
தனது குழந்தைகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கிய, போர்த்துக்கல் கால்பந்தாட்டச் சம்மேளனத்துக்கு நன்றி தெரிவித்த ரொனால்டோ, இந்த விடயத்தில், புரிந்து நடந்து கொண்டமைக்காக, போர்த்துக்கல் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரையும் தேசிய பயிற்றுநரையும், எப்போதும் மறக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.
இந்தத் தொடரில், போர்த்துக்கல்லின் குழுநிலைப் போட்டிகள் மூன்றிலும், போட்டியின் நாயகன் விருதை வென்ற ரொனால்டோ, அரையிறுதிப் போட்டியில், எதிர்பார்த்தளவு அவ்வளவு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago