2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

அணித்தலைவர் பதவியை இழக்கும் அசலங்க?

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 27 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் சரித் அசலங்கவை அணித்தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் தீர்மானமெதுவும் எடுக்கப்படவில்லையெனத் தெரிவித்த தலைமைத் தேர்வாளர் உபுல் தரங்க, மாற்றங்கள் குறித்து தேர்வாளர்கள் ஆராய்வதாகக் கூறியுள்ளார்.

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் அசலங்கவின் மோசமான பெறுபேறுகள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தரங்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து உடல்நலமின்மை எனத் தெரிவிக்கப்பட்டு இலங்கைக்கு அசலங்க வந்திருந்தார். இந்நிலையில் இஸ்லாமபாத்தில் தற்கொலைத் தாக்குதலொன்றையடுத்து பாகிஸ்தானில் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வீரர்களில் அசலங்கவும் ஒருவரெனவும், தண்டனையாலே அவர் இலங்கைக்கு வந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X