2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அமெச்சூர் கோல்ஃப் போட்டிக்கு சியெட் அனுசரணை

Editorial   / 2025 செப்டெம்பர் 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சியெட் ஐரோப்பிய வரிசையின் அனுசரணையில் வரலாற்று சிறப்புமிக்க ரோயல் கொழும்பு கோல்ஃப் கிளப் ஆனது செப்டம்பர் 23 ஆம் திகதி மீண்டும் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க அமெச்சூர் கோல்ஃப் போட்டியை நடத்தவுள்ளது. இதன்போது 134வது இலங்கை அமெச்சூர் கோல்ஃப் போட்டி மற்றும் இலங்கை மகளிர் ஸ்ட்ரோக் ப்ளே போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன.

 

இலங்கை கோல்ஃப் சங்கம் (SLGU) ஏற்பாடு செய்துள்ள இந்த வெற்றிக்கிண்ணப்  போட்டிகளுக்கு சியெட் ஐரோப்பிய வரிசையின் கீழ் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அனுசரணை வழங்கவுள்ளது.

 

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்; திரு. ரவி தத்லானி கூறுகையில், இந்த பங்குடைமையானது மிகவும் பொருத்தமுடையதாக திகழ்வதாக தெரிவித்தார்: 'கோல்ஃப் என்பது துல்லியம், சமநிலை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டானது, சிறந்த செயல்திறன் மற்றும் வீதியில் வசதிக்காக வடிவமைக்கப்பட்டவை என்ற அம்சங்களால் சியெட் ஐரோப்பிய  வரிசையுடன் மிகவும் ஆழமாக இசைகிறது' என்று அவர் கூறினார்.

 

இந்த ஆண்டு போட்டியானது ஒரு வலுவான சர்வதேச பரிமாணத்தை உறுதி செய்வதுடன் இப்போட்டியில் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தேசிய அணிகள் பங்குபற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இந்தியாவிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தனிப்பட்ட குழுக்கள் பங்குபற்றவுள்ளன.

 

ஆண்கள் போட்டியில்  பாடசாலை மாணவரான ஜெவன் சதாசிவம் தனது அமெச்சூர் விருதினை தக்க வைத்துக் கொண்டு திரும்புவார் எனவும் அதே வேளை கனிஷ்ட வீராங்கனையான கயா தலுவத்த இலங்கை அமெச்சூர் மற்றும் இலங்கை மகளிர் ஸ்ட்ரோக் ப்ளே போட்டி இரண்டிலும் தனது இரட்டை வெற்றியை மீண்டும் பெற முயற்சிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அவர்கள் வளர்ந்து வரும் நட்சத்திரங்களான தமது முதலாவது வெற்றிக்காக காத்திருக்கும் ரேஷான் அல்கம, ஜேக்கப் நோர்டன், சலிதா புஷ்பிகா மற்றும் உச்சிதா ரணசிங்க ஆகியோரிடமிருந்து  வலுவான சவால்களை எதிர்கொள்ளவுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X