Shanmugan Murugavel / 2021 ஜூன் 03 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், உட்ரெச்ட்டில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் நெதர்லாந்து ஓர் ஓட்டத்தால் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து, கிரேய்க் யங்க் (3) சிமி சிங்க் (1), ஜோஷுவா லிட்டில் (3), அன்டி மக்பிரைனிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்த நிலையில், டிம் வான் டர் குக்டனின் 49 (53) ஓட்டங்களுடன், 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 196 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, போல் ஸ்டேர்லிங்கின் 69 (112), சிமி சிங்கின் 45 (69) ஓட்டங்களுடன் போராடியபோதும், அணித்தலைவர் பீற்றர் சீலரிடம் 3, லோகன் வான் பீக்கிடம் 2, பிரெட் கிளாஸென், பிரண்டன் குளோவர், வாட் டர் குக்டனிடம் தலா ஒவ்வொரு விக்கெட்டைப் பறிகொடுத்து, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக வான் டர் குக்டன் தெரிவானார்.
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago