Shanmugan Murugavel / 2016 மார்ச் 10 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலக இருபதுக்கு-20 தொடரின் தகுதிச் சுற்றுப்போட்டியொன்றில், சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்களில் பிரதான அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் அயர்லாந்து அணிக்கு ஓமான் அதிர்ச்சிளித்துள்ளது.
தரம்சாலா மைதானத்தில் கடந்த புதன்கிழமை (09) இரவு, இப்போட்டி இடம்பெற்ற நிலையில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணியின் தலைவர் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில், கரி வில்சன் 38 ஓட்டங்களையும் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், போல் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா 29 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், ஓமான் அணி சார்பாக முனிஸ் அன்சாரி மூன்று விக்கெட்டுகளையும் ஆமீர் கலீம், கவார் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, 19.4 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர்கள், ஸீஷன் மக்ஸூட் 38, கவார் அலி 34 ஓட்டங்களைப் பெற்றதோடு, இறுதி நேரத்தில் போட்டியின் போக்கை மாற்றிய அமிர் அலி 17 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், 5, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில், அன்டி மக்பிரைன், கெவின் ஓ பிரைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பொயிட் ராங்கின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக ஒமானின் அமிர் அலி தெரிவானார்.
18 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
1 hours ago