Shanmugan Murugavel / 2016 மார்ச் 26 , மு.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலக இருபதுக்கு-20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது. நாக்பூரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணியைத் தோற்கடித்தையடுத்தே மேற்கிந்தியத்தீவுகள் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆரம்பத்தில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டரன் சமி, தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, வரிசையாக விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, குயின்டன் டீ கொக் 47, டேவிட் விஸே 28 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பாக, டுவைன் பிராவோ, கிறிஸ் கெய்ல், அன்ட்ரே ரஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டினை கைப்பற்றினர்.
பதிலுக்கு, 123 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, தமது இன்னிங்ஸின் இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, மார்லன் சாமுவேல்ஸ் 43, ஜோன்சன் சார்ள்ஸ் 32 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணி சார்பாக, இம்ரான் தாகீர் 2 விக்கெட்டுகளையும் ஆரோன் பான்கிசோ, டேவிட் விஸே, கிறிஸ் மொரிஸ், கஜிஸ்கோ ரபடா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார்.
19 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago