Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இறுதி நேரத்தில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்குக் காரணமான பெனால்டியை, தவறான முறையில் வழங்கிய போட்டி மத்தியஸ்தர் கிறெய்க் ஜோபேர்ட், கடுமையான அழுத்தங்களைச் சந்தித்துள்ளார்.
முதலில், அந்தத் தீர்ப்பானது, உலகக் கிண்ண வரலாற்றில் முக்கியமான அதிர்ச்சி வெற்றிகளில் ஒன்றாக ஸ்கொட்லாந்து பெறக்கூடிய வெற்றியைத் தடுத்தமையால், ஸ்கொட்லாந்து இரசிகர்களினதும் நடுநிலை இரசிகர்களினதும் கோபத்துக்கு அவர் உள்ளாகினார்.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அவருக்கான கௌரவ அவுஸ்திரேலியப் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டுமென, சமூக ஊடகங்களில் கேலிகள் பரவப்பட்டன.
அடுத்ததாக, போட்டி முடிவடைவதற்கான விசிலை வழங்கியதைத் தொடர்ந்து, வீரர்களுடன் கைகுலுக்கும் சம்பிரதாயத்துக்கு முரணாக, வீரர்கள் வெளியேற முன்னரே மைதானத்திலிருந்து ஓடிச் சென்றிருந்தார்.
இது, கடுமையான விமர்சனங்களை எழுப்பியதோடு, இனிமேல் அவர், சர்வதேசப் போட்டிகளில் போட்டி மத்தியஸ்தராகக் கடமையாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களை எழுப்பியுள்ளது.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago