Shanmugan Murugavel / 2026 மார்ச் 10 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அடைக்கலமளிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களை அணி ஹொட்டலிலிருந்து அவுஸ்திரேலிய பொலிஸார் மீட்டெடுத்ததாக அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு அமைச்சர் டொனி புர்கே தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ணப் போட்டியொன்றுக்கு முன்பாக தேசிய கீதத்தை பாட மறுத்த நிலையில் அணியை போர்க்கால துரோகிகளென உருவகப்பட்டதையடுத்து அணித்தலைவி உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் பாதுகாப்பைத் தேடியிருந்தனர்.
கோல்ட் கோஸ்ட் ஹொட்டலில் இன்னமும் உள்ள குழாமின் எஞ்சிய 21 உறுப்பினர்களுக்கான புகலிட வாய்ப்பு இன்னும் உள்ளதெனத் தெரிவித்த புர்கே, சிலர் ஈரானுக்குத் திரும்புவார்களென எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியா வீராங்கனைகளை பொறுப்பெடுக்கா விட்டால் ஐக்கிய அமெரிக்கா பொறுப்பெடுக்கத் தயாராக இருந்ததாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
11 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
1 hours ago