2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் மக்ஸ்வெல், மார்ஷ், றிச்சர்ட்ஸன்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 23 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில், நீண்ட காலமாக காயங்கள் காரணமாக போட்டிகளில் பங்கேற்றிருக்காத கிளென் மக்ஸ்வெல், மிற்செல் மார்ஷ், ஜஹை றிச்சர்ட்ஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, தற்போது இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா சென்றுள்ள அணித்தலைவர் பற் கமின்ஸ், டேவிட் வோர்னர், அஸ்தன் அகர் ஆகியோரும் குறித்த குழாமில் காணப்படுகின்றனர். எவ்வாறெனினும், இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பிய ஜொஷ் ஹேசில்வூட் குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: பற் கமின்ஸ் (அணித்தலைவர்), ஷோன் அபொட், அஸ்தன் அகர், அலெக்ஸ் காரி, கமரொன் கிறீன், ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மர்னுஸ் லபுஷைன், மிற்செல் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், ஜஹை றிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிற்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், டேவிட் வோர்னர், அடம் ஸாம்பா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X