2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரை 2-1 எனக் கைப்பற்றிய இந்தியா

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 13 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகித்த நிலையில், அஹமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி இன்று வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்த நான்காவது போட்டியைத் தொடர்ந்தே தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 480 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், உஸ்மான் கவாஜா 180, கமரொன் கிறீன் 114, டொட் மேர்பி 41, பதிலணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 38, நேதன் லையன் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் 6, மொஹமட் ஷமி 2, அக்ஸர் பட்டேல் மற்றும் இரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 571 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், விராட் கோலி 186, ஷுப்மன் கில் 128, அக்ஸர் பட்டேல் 79, ஶ்ரீகர் பாரத் 44, செட்டேஸ்வர் புஜாரா 44, அணித்தலைவர் றோஹித் ஷர்மா 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மேர்பி மற்றும் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மத்தியூ கூனுமென், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 2 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்ததோடு போட்டி முடிவுக்கு வந்தது. துடுப்பாட்டத்தில், ட்ரெவிஸ் ஹெட் 90, மர்னுஸ் லபுஷைன் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பட்டேல், அஷ்வின் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்போட்டியின் நாயகனாக கோலியும், இணைத் தொடர் நாயகன்களாக அஷ்வினும், ஜடேஜாவும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X