Editorial / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பேர்த்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 38.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், நேதன் கூல்டர்நைல் 34 (31), அலெக்ஸ் காரே 33 (71) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அன்டிலி பெக்லுவாயோ 3, டேல் ஸ்டெய்ன், லுங்கி என்கிடி, இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 153 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 29.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலைக்கையடைந்து, 20.4 ஓவர்கள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளால் வென்றது. துடுப்பாட்டத்தில், குயின்டன் டி கொக் 47 (40), றீஸா ஹென்ட்றிக்ஸ் 44 (74), ஏய்டன் மர்க்ரம் 36 (32) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 3, நேதன் கூல்டர்நைல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக டேல் ஸ்டெய்ன் தெரிவானார்.
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago