Shanmugan Murugavel / 2025 ஜூன் 11 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது லோர்ட்ஸில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
அவுஸ்திரேலிய அணியே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள அணியாகக் கருதப்படுகின்றபோதும் தென்னாபிரிக்க அணி சவாலை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணியில் மர்னுஸ் லபுஷைன் மீது அழுத்தம் காணப்பட்டாலும் உஸ்மான் கவாஜாவோடு சாம் கொன்ஸ்டாஸை விடுத்து லபுஷைனே ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கவுள்ளார்.
மூன்றாமிடத்தில் கமரன் கிறீன் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுவதோடு ஸ்கொட் போலண்ட் சிறப்பாகச் செயற்பட்டபோதும் அணித்தலைவர் பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க்குடன் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஜொஷ் ஹேசில்வூட்டே களமிறங்குகிறார்.
தென்னாபிரிக்காவைப் பொறுத்த வரையில் ககிஸோ றபாடா, மார்கோ ஜன்சன், கேஷவ் மஹராஜ்ஜோடு அடுத்த பந்துவீச்சாளராக லுங்கி என்கிடி களமிறங்குகிறார்.
16 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago