Shanmugan Murugavel / 2024 மார்ச் 25 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய குரான் பிறீயானது நேற்று நடைபெற்ற நிலையில் பெராரி அணியின் கார்லோஸ் சைன்ஸ் ஜூனியர் வென்றார்.
பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த ஸ்பெய்னின் சைன்ஸ், ஆரம்பத்திலேயே பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்புச் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்தியே வென்றிருந்தார்.
இரண்டாமிடத்தை சைன்ஸின் சக பெராரி அணி வீரரான சார்ள்ஸ் லெக்கலெர்க்கும், மூன்றாமிடத்தை மக்கலரென் அணியின் லான்டோ நொரிஸும் பெற்றனர்.
இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 51 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் காணப்படுகிறார். இரண்டாமிடத்தில் 47 புள்ளிகளுடன் மொனாக்கோவின் லெக்கலெர்க்கும், மூன்றாமிடத்தில் 46 புள்ளிகளுடன் சைன்ஸும் காணப்படுகின்றனர்.
53 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago