Shanmugan Murugavel / 2021 ஜூன் 06 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேற்று நடைபெற்ற அஸார்பைஜான் குரான் பிறீயில், றெட் புல் அணியின் சேர்ஜியோ பெரேஸ் வென்றார்.
முன்னணியில் இருந்த சக றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதுடன், மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் விபத்தின் பின்னர் முன் டயர்களை இறுக்கி ஓடுபாதையிலிருந்து விலகிய நிலையிலேயே, மெக்ஸிக்கோவின் பெரேஸ் வென்றார்.
இப்பந்தயத்தில் இரண்டாமிடத்தை அஸ்தன் மார்டின் அணியின் செபஸ்டியன் வெட்டலும், மூன்றாமிடத்தை அல்பா தெளரி அணியின் பியரி கஸ்லியும் பெற்றனர்.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 105 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார். 101 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பிரித்தானியாவின் ஹமில்டனும், 69 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பெரேஸும் காணப்படுகின்றனர்.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago