Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முக்கியமான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இலங்கை அணி மோதிக்கொண்டிருக்கின்றது. இந்தப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களமிறங்கியது.
இந்தப் போட்டி இலங்கைக்கு முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்
தீர்மானமிக்க இன்றைய போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பத்தும் நிசங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திமுத் கருணாரத்ன 15 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.
குசல் மெண்டிஸ், பத்தும் நிசங்க ஜோடி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்காக 62 ஓட்டங்கள் இணைப்பாட்டம் பெறப்பட்டிருந்த வேளையில், பத்தும் நிசங்க 46 ஓட்டங்களுடன் தமது விக்கெட்டை பறிக்கொடுத்திருந்தார்.
குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க அடுத்துவந்த வீரர்கள் பெரிதாக திறமையை காட்டவில்லை.
அஞ்சலோ மெத்யூஸ் 23 ஓட்டங்களையும் மஹேீஸ் தீக்ஷன 29 ஓட்டங்ளையும் பெற்றுக்கொடுக்க இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன் பிரகாரம் 242 ஓட்டங்கள் ஆப்கானிஸ்தான் அணிக்குக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்தது.
9 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago