Shanmugan Murugavel / 2016 ஜூன் 09 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, ஐந்து வருடத் தடைக்குப் பின்னர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மட் ஆமிருக்கு, ஐக்கிய இராச்சிய விசா கிடைத்துள்ளதாகவும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துத் தொடருக்காக அவர் 18ஆம் திகதி அணியுடன் பயணமாவார் என இன்று வியாழக்கிழமை (09) பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பமாகும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் ஆமிர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும், 2010ஆம் ஆண்டு ஸ்பொட் பிக்சிங் வழக்கில், இங்கிலாந்தில் வைத்து ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்ததால், ஆமிருக்கு ஐக்கிய இராச்சியத்துக்கான விசா வழங்கப்படுமா என்ற சந்தேகம் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 20ஆம் திகதி, ஆமிரின் விசாவுக்காக விண்ணப்பித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், 21 நாட்களுக்கு பின்னர் விசா கிடைத்துள்ளது. இந்த விண்ணப்பத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் ஆதரவு வழங்கியிருந்தது.
2014ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஐக்கிய இராச்சிய விசாவுக்கு விண்ணப்பித்திருந்த ஆமிரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago