2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

ஆரம்பிக்கிறது ஆசியக் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (09) இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான், ஹொங் கொங்குக்கிடையிலான குழு பி போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

குழு பியில் ஆப்கானிஸ்தான், ஹொங் கொங் தவிர இலங்கை, பங்களாதேஷும் இடம்பெற்றுள்ளன.

குழு ஏயில் நடப்புச் சம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான்,ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன காணப்படுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் மோதி, இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். சுப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் விளையாடி முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

குழு பியே கடினமானதாகக் காணப்படுகின்றது. சம்பியனாவதற்குரிய பெரும்பாலான வாய்ப்புகளை இந்தியாவே கொண்டுள்ளபோதும் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் சவாலை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .