Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 06 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், அடிலெய்டில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் 120 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
தமது இரண்டாவது இனிங்ஸில் 354 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜோ றூட் 67, ஜொனி பெயார்ஸ்டோ 36, மார்க் ஸ்டோன்மன் 36, டேவிட் மலன் 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் 5, நேதன் லயன், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா 2, பற் கமின்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஷோர்ன் மார்ஷ் தெரிவானார்.
ஸ்கோர் விபரம்:
அவுஸ்திரேலியா: 442/8 (துடுப்பாட்டம்: ஷோர்ன் மார்ஷ் ஆ.இ 126, டிம் பெய்ன் 57, உஸ்மான் கவாஜா 53, டேவிட் வோணர் 47, பற் கமின்ஸ் 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிரேய்க் ஒவெர்ட்டன் 3/105, ஸ்டூவர்ட் ப்ரோட் 2/72)
இங்கிலாந்து: 227/10 (துடுப்பாட்டம்: கிரேய்க் ஒவெர்ட்டன் 41, அலிஸ்டியர் குக் 37, கிறிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லயன் 4/60, மிற்செல் ஸ்டார்க் 3/49, பற் கமின்ஸ் 2/47)
அவுஸ்திரேலியா: 138/10 (துடுப்பாட்டம்: மிற்செல் ஸ்டார்க் 20, உஸ்மான் கவாஜா 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 5/43, கிறிஸ் வோக்ஸ் 4/36)
இங்கிலாந்து: 233/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 67, ஜொனி பெயார்ஸ்டோ 36, மார்க் ஸ்டோன்மன் 36, டேவிட் மலன் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 5/88, நேதன் லயன் 2/45, ஜொஷ் ஹேசில்வூட் 2/49)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago