2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஆஷஸ் முதல் நாளில் 147 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சுருண்டது

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில், பிறிஸ்பேணில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களையே இங்கிலாந்து பெற்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இனிங்ஸின் முதலாவது பந்திலேயே மிற்செல் ஸ்டார்க்கிடம் றோறி பேர்ண்ஸை இழந்தது. பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் டேவிட் மலான், றூட்டை ஜொஷ் ஹேசில்வூட்டை இங்கிலாந்து இழந்ததோடு, குறிப்பிட்ட நேரத்தில் அணித்தலைவர் பற் கம்மின்ஸிடம் பென் ஸ்டோக்ஸை இழந்தது.

இதையடுத்து நிலைத்த ஹசீப் ஹமீட்டும், ஒலி போப்பும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 25 ஓட்டங்களுடன் கமின்ஸிடம் ஹமீட் வீழ்ந்தார். அடுத்து வந்த ஜொஸ் பட்லர் ஓட்டங்களைச் சேர்த்தபோதும், 39 ஓட்டங்களுடன் அவர் ஸ்டார்க்கிடமும், 35 ஓட்டங்களுடன் கமரோன் கிறீனிடம் போப்பும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் கிறிஸ் வோக்ஸ் ஓட்டங்களைப் பெற்றபோதும், ஒலி றொபின்ஸன், மார்க் வூட் ஆகியோர் சிறிய இடைவெளிகளில் கமின்ஸிடம் வீழ்ந்ததோடு, இறுதியாக 21 ஓட்டங்களுடன் வோக்ஸும் கமின்ஸிடம் விழ, சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 147 ஓட்டங்களையே இங்கிலாந்து பெற்றது.

இதைத் தொடர்ந்து மழையால் ஆட்டம் இடம்பெறவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .