Editorial / 2025 ஜனவரி 14 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது நாளான திங்கட்கிழமை (13) ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான இத்தாலியன் ஜன்னிக் சின்னர், 36-ம் நிலை வீரரான சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார். 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 7-6 (7-2), 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
17-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாஃபோ 7-6, 6-3, 4-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் 61-ம் நிலை வீரரான பிரான்சின் ஆர்தர் ரிண்டர்கினெக்கையும், 27-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜோர்டர்ன் தாம்சன் 7-6 (7-3), 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 87-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டொமினிக் கோப்ஃபரையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago