Shanmugan Murugavel / 2021 ஜூன் 22 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கார்டிஃப்பில் இலங்கை நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் முதலாமிடத்தில் இங்கிலாந்தும், எட்டாமிடத்தில் இலங்கையும் காணப்படுகின்றன.
இந்நிலையில், இத்தொடரை இலங்கை வென்றால் ஏழாமிடத்துக்கு முன்னேறும் என்பதோடு, இங்கிலாந்து இரண்டாமிடத்துக்கு கீழிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அணித்தலைவர் ஒய்ன் மோர்கனின் கீழ் ஜொஸ் பட்லர், ஜொனி பெயார்ஸ்டோ, டேவிட் மலன், ஜேஸன் றோய், சாம் கர்ரன், அடில் ரஷீட், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் என மிகவும் பலமானதாக இங்கிலாந்து காணப்படுகின்றது.
அந்தவகையில், இத்தொடரில் எவ்விதமான வாய்ப்பையும் கொண்டிருப்பதற்கு அணித்தலைவர் குஷல் பெரேரா, தனுஷ்க குணதிலக உள்ளிட்டோர் பெரிய இனிங்ஸ்களை ஒவ்வொரு போட்டியிலும் நிலைத்து நின்று ஆட வேண்டியுள்ளது.
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago