2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

இங்கிலாந்தை வென்ற தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

மழை காரணமாக 9 ஓவர்கள் கொண்டதாக அமைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, 7.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில் மீண்டும் மழை குறுக்கிட்ட நிலையில் அத்துடன் தென்னாபிரிக்காவின் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் 28 (14), டொனோவன் பெரைரா ஆட்டமிழக்காமல் 25 (11), டெவால்ட் பிறெவிஸ் 23 (10), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 13 (06) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் 5 ஓவர்களில் 69 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து,  5 ஓவர்களில் 54 ஓவர்களையே பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜொஸ் பட்லர் 25 (11), சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 10 (03) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மார்கோ ஜன்சன் 2, கொர்பின் பொஷ் 2, ககிஸோ றபாடா ஒரு விக்கெட்டைக் கைப்ப்ற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக பெரைரா தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .