Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், டொரினோவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் சமப்படுத்தியது.
இன்டர் சார்பாக மார்க்கஸ் துராம், யன் ஒரெல் பிஸ்ஸெக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொரினோ சார்பாக ஜியோவனி சிமியோன், நிகொலா விளாசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஜுவென்டஸுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் சமப்படுத்தியது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இன்டர் மிலன் 79 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 69 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான நாப்போலியும், 67 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும் 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் உள்ளன.
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago