Shanmugan Murugavel / 2026 மார்ச் 08 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற உடினிஸுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஜனுலூகா ஸ்கமாக்கா பெற்றதோடு, உடினிஸ் சார்பாக தோமஸ் தெய்ஸன் கிறிஸ்டென்சன், கெய்னன் டேவிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 67 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் உள்ளது. 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான நாப்போலியும் காணப்படுகின்றது. கோமோ, றோமா ஆகியன தலா 51 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகள் காரணமாக முறையே நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன. இதில் நாப்போலி, கோமோ ஆகியன ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.
16 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago