Shanmugan Murugavel / 2026 மார்ச் 17 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரிக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அபார வெற்றி பெற்றது.
கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட யாழ். இந்து, பாவணனின் 81 (105) ஓட்டங்களுடன் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் தேஸ்கர் 3, யுவ்ராஜ் 3, யாதவ் 2, சந்தோஷ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 221 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்து, 37.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களையே பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அபினேஷ் 41 (52) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நிதீஸ் 2, சிவகஜீசன் 2, அபிவர்ணன் 1, அணித்தலைவர் சுபர்ணன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
3 minute ago
7 minute ago
11 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
11 minute ago
20 minute ago