Shanmugan Murugavel / 2025 மே 25 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியக் குழாமில் அர்ஷ்டீப் சிங், கருண் நாயர், சாய் சுதர்ஷன், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் டெஸ்ட் குழாமொன்றில் சுதர்சன், அர்ஷ்டீப் ஆகியோர் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
இந்தியா இறுதியாக விளையாடிய அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடருக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருந்த ஹர்ஷித் ரானா, சஃப்ராஸ் கான் ஆகியோர் இக்குழாமில் இடம்பெறவில்லை.
அணித்தலைவராக ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளதோடு, உப அணித்தலைவராக றிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
குழாம்: ஷுப்மன் கில் (அணித்தலைவர்), யஷஸ்வி ஜைஸ்வால், லோகேஷ் ராகுல், றிஷப் பண்ட் (உப அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), துருவ் ஜுரேல் (விக்கெட் காப்பாளர்), இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஆகாஷ் டீப், பிரசீத் கிருஷ்ணா, சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்டீப் சிங்.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago