Shanmugan Murugavel / 2025 ஜூலை 14 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி 6 விக்கெட்டுகள் கைவசமிருக்கையில் இறுதி நாளில் 135 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
லோர்ட்ஸில் வியாழக்கிழமை (10) ஆரம்பித்த இப்போட்டியின் நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி இரண்டு ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இங்கிலாந்து, மொஹமட் சிராஜ் (2), நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் டீப், வொஷிங்டன் சுந்தர் (4), ஜஸ்பிரிட் பும்ராவிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களையே பெற்றது. ஜோ றூட் 40, அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 193 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, ஜொஃப்ரா ஆர்ச்சர், பிறைடன் கார்ஸ் (2), ஸ்டோக்ஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து நான்காம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் லோகேஷ் ராகுல் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளார்.
32 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago