Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஜமைக்காவில் இடம்பெற்ற இப்போட்டியில், இந்திய அணியால் வழங்கப்பட்ட 191 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கிறிஸ் கெயில், பெருமளவுக்குச் சோபிக்காத நிலையிலும், 18.3 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது.
இந்தியாவுக்கு எதிராக, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், ஏற்கெனவே ஒரு சதத்தைப் பெற்றிருந்த எவின் லூயிஸ், இரண்டாவது சதத்தை, இப்போட்டியில் பெற்றார். 53 பந்துகளில் தனது சதத்தை அவர் பூர்த்தி செய்தார். இதன்மூலம், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், அதி வேகமாக 20 சதங்கள் பட்டியலில், இரண்டு தடவைகள் இடம்பெற்ற மூன்றாமவர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஏற்கெனவே பிரென்டன் மக்கலம், கிறிஸ் கெயில் ஆகியோர் இப்பெருமையைக் கொண்டவர்களாவர்.
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தரவரிசை அடிப்படையில், இந்திய அணி 4ஆவது இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5ஆவது இடத்திலும் காணப்படுகின்ற நிலையில், இவ்வளவு இலகுவான வெற்றியை, மேற்கிந்தியத் தீவுகள் அணி பெறுமென எதிர்பார்க்கப்பட்டிருக்கவில்லை.
இதன்படி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 1-3 என இழந்தாலும், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்று, ஆறுதல் வெற்றியை, மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக் கொண்டது.
ஸ்கோர் விவரம்...
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா: 190/6 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: டினேஷ் கார்த்திக் 48 (29), விராத் கோலி 39 (22), றிஷாப் பான்ட் 38 (35) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெரோம் டெய்லர் 2/31, கெஸ்ரிக் வில்லியம்ஸ் 2/42)
மே.தீவுகள்: 194/1 (18.3 ஓவ.) (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் ஆ.இ 125 (62), மார்லன் சாமுவேல்ஸ் ஆ.இ 36 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 1/34)
போட்டியின் நாயகன்: எவின் லூயிஸ்
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago