Editorial / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டெல்லியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்று முடிவடைந்தது.
தமது இரண்டாவது இனிங்ஸில், 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தவாறு இன்றைய ஐந்தாம் நாளை ஆரம்பித்த இலங்கையணி, போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிப்பதற்கு இரண்டு அணித்தலைவர்களும் இணங்கிய வேளையில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 119, றொஷேன் சில்வா ஆட்டமிழக்காமல் 74, நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 44, தினேஷ் சந்திமால் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 3, இரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் விராத் கோலி தெரிவானார்.
அந்தவகையில், முதலாவதும் இந்த டெஸ்டும் வெற்றி தோல்வியின்றி முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்டை வென்ற இந்தியா, 1-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விபரம்:
இந்தியா: 536/7 (துடுப்பாட்டம்: விராத் கோலி 243, முரளி விஜய் 155 ஓட்டங்கள். பந்துவீச்சு: லக்ஷான் சந்தகான் 4/167, லஹிரு கமகே 2/95)
இலங்கை: 373/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 164, அஞ்சலோ மத்தியூஸ் 111 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 3/90, இஷாந்த் ஷர்மா 3/98, மொஹமட் ஷமி 2/85, இரவீந்திர ஜடேஜா 2/86)
இந்தியா: 246/5 (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 67, ரோகித் ஷர்மா ஆ.இ 50, விராத் கோலி 50, செட்டேஸ்வர் புஜாரா 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு கமகே 1/48, சுரங்க லக்மால் 1/60)
இலங்கை: 299/5 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 119, றொஷேன் சில்வா ஆ.இ 74, நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 44, தினேஷ் சந்திமால் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/81)
2 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago