2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மொஹாலியில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். அவுஸ்திரேலியா சார்பாக டிம் டேவிட் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஆரம்பத்திலேயே அணித்தலைவர் றோஹித் ஷர்மா, விராட் கோலியை ஜொஷ் ஹேசில்வூட், நாதன் எலிஸிடம் இழந்தது.

இதையடுத்து இணைந்த லோகேஷ் ராகுல், சூரியகுமார் யாதவ்வின் இணைப்பாட்டத்தால் இந்தியாவின் இனிங்ஸானது வேகமாக நகர்ந்த நிலையில், ராகுல், யாதவ் ஆகியோர் முறையே 55 (35), 46 (25) ஓட்டங்களுடன் ஹேசில்வூட், கமரொன் கிறீனிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் வீழ்ந்தனர்.

இந்நிலையில், அக்ஸல் பட்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் எலிஸிடம் வீழ்ந்தபோதும், ஹர்டிக் பாண்டியாவின் ஆட்டமிழக்காத 71 (30) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை இந்தியா பெற்றது.

பதிலுக்கு 209 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் பின்ஞை 22 (13) ஓட்டங்களுடன் அக்ஸர் பட்டேலிடம் இழந்தது. பின்னர் வேகமாகத் துடுப்பெடுத்தாடிய கிறீனை 61 (30) ஓட்டங்களுடன் பட்டேலிடம் இழந்த அவுஸ்திரேலியா, குறிப்பிட்ட இடைவெளியில் உமேஷ் யாதவ்வின் ஓவரில் ஸ்டீவ் ஸ்மித்தை 35 (24) ஓட்டங்களுடனும், கிளென் மக்ஸ்வெல்லையும் இழந்தது.

தொடர்ந்து ஜொஷ் இங்லிஸ் 17 (10) ஓட்டங்களுடன் பட்டேலிடம் வீழ்ந்தபோதும், மத்தியூ வேட்டின் ஆட்டமிழக்காத 45 (21), யுஸ்வேந்திர சஹாலிடம் இறுதி ஓவரில் வீழ்ந்த டேவிட்டின் 18 (14) ஓட்டங்களோடு 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அவுஸ்திரேலியா அடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கிறீன் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X