Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 நவம்பர் 15 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.
லீக் சுற்றுப் போட்டிகளில் தோல்வியே அடையாமல் ஜாம்பவானாகக் காட்சியளிக்கும் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்துவதானது எதிர்பாராத முடிவொன்றாகவே இருக்கும். எனினும் அண்மைய உலகக் கிண்ணத் தொடர்களின் விலகல் போட்டிகளில் நான்கு தடவைகள் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தியுள்ளது.
இப்போட்டியைப் பொறுத்த வரையில் நாணயச் சுழற்சி முக்கியமானதாகக் காணப்படுகின்றது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அதற்காக இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணிக்கு வாய்ப்புகள் இல்லையெனக் கூறி விட முடியாது. இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணியானது 25 ஓவர்கள் வரைக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை இழக்காதவிடத்து வெற்றியிலக்கை எட்ட வாய்ப்புகளுண்டு. ஏனெனில் மும்பையில் இரண்டாவது இனிங்ஸிலேயே பந்து அதிகம் ஸ்விங் ஆவதுடன், 15 ஓவர்கள் வரையில் நீடிப்பதோடு, ஸீமானது 20 ஓவர்கள் தாண்டியும் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அந்தவகையில் இந்திய அணி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடுமிடத்து இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மா இத்தொடர் முழுவதும் வழங்கிய வேகமான ஆரம்பத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம். ஷர்மாவின் வேகமான ஆரம்பங்களால் அழுத்தமில்லாத கோலியிடமிருந்து சிறப்பான பெறுபேறுகள் கிடைக்கப் பெறுகையில் இவர்கள் இருவருமே நியூசிலாந்தின் இலக்காகக் காணப்படுவர்.
மறுபக்கமாக நியூசிலாந்தின் முக்கியமான வீரராக மிற்செல் சான்ட்னெர் காணப்படுகையில் இவரின் 10 ஓவர்களையும் இந்தியா நிதானமாகக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தவிர நியூசிலாந்தின் பகுதிநேர பந்துவீச்சாளரான றஷின் றவீந்திரவை இந்தியா இலக்கு வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி: 1. றோஹித் ஷர்மா, 2. ஷுப்மன் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் ஐயர், 5. லோகேஷ் ராகுல் (விக்கெட் காப்பாளர்), 6. சூரியகுமார் யாதவ், 7. இரவீந்திர ஜடேஜா, 8. மொஹமட் ஷமி, 9. ஜஸ்பிரிட் பும்ரா, 10. குல்தீப் யாதவ், 11. மொஹமட் சிராஜ்.
எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி: 1. டெவோன் கொன்வே, 2. றஷின் றவீந்திர, 3. கேன் வில்லியம்ஸன், 4. டரைல் மிற்செல், 5. மார்க் சப்மன், 6. கிளென் பிலிப்ஸ், 7. டொம் லேதம், 8. மிற்செல் சான்ட்னெர், 9. லொக்கி பெர்கியூசன், 10. டிம் செளதி, 11. ட்ரெண்ட் போல்ட்.
3 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago
4 hours ago