2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இந்தியாவை வென்றது இலங்கை

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில், தரம்சாலாவில் இன்று ஆரம்பமான முதலாவது போட்டியில் இலங்கை அபார வெற்றிபெற்றது. 

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, 38.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், இந்திய அணி சார்பாக, மகேந்திர சிங் டோணி 65 (87), குல்தீப் யாதவ் 19 (25), ஹர்டிக் பாண்டியா 10 (10) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இலங்கையணி சார்பாக, சுரங்க லக்மால் 4, நுவான் பிரதீப் 2, அஞ்சலோ மத்தியூஸ், அகில தனஞ்சய, சச்சித் பத்திரண, அணித்தலைவர் திஸர பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 113 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி,  20.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், உபுல் தரங்க 49 (46), நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 26 (24), அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 25 (42) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சுரங்க லக்மால் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X